Total Pageviews

Tuesday, February 10, 2015

I bless Aam Aadmi Party (AAP) to make Corruption less India... as per their dreams... Corruption in India went to the heights of cruelty...



I bless Aam Aadmi Party (AAP) and Sri. Arvind Kejriwal to make Corruption less India... as per their dreams... Corruption in India went to the heights of cruelty...

http://sugavanam-english-writings.blogspot.in/2015/02/i-bless-aam-aadmi-party-aap-to-make.html

டில்லியில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதற்கான காரணங்கள் என்னென்ன?
1. கடந்த முறை பதவியை ராஜினாமா செய்தது தவறு என்று பொது மக்களிடம் பகிரங்க மன்னிப்பை கேட்டார்...குற்றத்தை ஏற்றுக்கொள்ளும் அம்மனப்பான்மை மக்களுக்கு பிடித்தது .
2.மதம், ஜாதி ஆகியவைகளின் அடிப்படையில் தேர்தலில் கூட்டு சேராமலும்..வேட்பாளர் தேர்வு செய்யாமலும் ..அந்த அரசியலுக்கு எதிராகவும் இருந்து காட்டினார்..வந்த ஆதரவையும் ஏற்க மறுத்தார்...
3.ஊழல் சம்பந்தப்பட்டவர்களை கட்சியில் யாரையும் சேர்க்கவில்லை..பதவிகளையும் அளிக்கவில்லை...
4.தனதோ அல்லது கட்சியினருடையவோ வாரிசுகளுக்கு கட்சியில் பதவி எதையும் அளிக்கவில்லை..
5.பிரசாரங்களில் தனிப்பட்ட தாக்குதல்கள் யார் மீதும் நடத்தவில்லை..மக்களின் பிரச்சனைகளை பற்றி மட்டுமே பேசினார்..
6.ஆடம்பர விளம்பரங்களை செய்யவில்லை...
மக்களை நேரிடையாகவே தெரு முனை கூட்டங்கள் மூலம் தானும் சந்தித்து தனது கட்சியினரையும் சந்திக்க செய்தார்.
7.சட்ட மன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டுக்கான ஆண்டு நிதியான கோடிகளை எப்படி..எந்தெந்த காரியங்களுக்கு செலவு செய்ய வேண்டுமென தனது எம்.எல்.ஏக்களை மக்களோடு கூட்டங்கள் மூலம் கலந்தாய்வினை நடத்த செய்தார்...
8.இளைஞர்களையும் இணைய தளத்தையும் வைத்துக்கொண்டு வெறுமனே "மூச்சே..சுவாசமே..உயிரே...என்றெல்லாம் வெட்டி பதிவுகள் போட்டு துதி பாடி கொண்டு இருக்காமல் மக்கள் பிரச்சனைகளையும் அவைகளை எப்படி சந்திப்பது என்பன போன்ற பயனுள்ள பதிவுகளை இட்டு படித்த மக்களை கவர்ந்தார்..
9.தனக்கு போதிய எம்.எல்.ஏ க்கள் இல்லாமல் ஆட்சி நடத்திய சூழலிலும் அமைச்சர் பதவி இல்லையென்றால் வெளியே போய்விடுவேநென மிரட்டிய பென்னி போன்ற எம்.எல்.ஏக்களை சமரச பேச்சு நடத்தி உள்ளேகட்டி வைக்காமல் துணிச்சலாக ...
.அவர்களை வெளியேற செய்தார்.
இப்படி மக்கள் மனதினை கவர்ந்ததால் தான்
இப்படி ஒரு வெற்றியை பெற முடிந்தது...
கேஜ்ரிவால் மட்டுமல்ல..
யார் இப்படி செய்தாலும்
இப்படிப்பட்ட வெற்றியை நிச்சயம் சுவைக்க இயலும்..

No comments:

Post a Comment